பிரியா வாரியரிடம் கேள்வி கேட்ட ரசிகர்.. நச்சுன்னு பதிலடி கொடுத்த சம்பவம்!

129

பிரியா வாரியர்..

செளிப்ரிடீஸ் என்றாலே அவர்களை பின் தொடர்வதிலும் அவர்களுடைய அன்றாட நிகழ்வுகளை கவனிப்பதிலும் ரசிகர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருக்கும். அந்த வகையில் ஒரு சினிமா பிரபலத்தின் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு அந்த நடிகை மிகவும் காட்டமாக பதிலடி கொடுத்திருக்கிறார்.

யார் அந்த நடிகை? என்ன கேள்வி அது? மலையாள திரையுலகில் நடிகையாக இருப்பவர் தான் பிரியாவாரியர். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானவர்.

அந்த திரைப்படத்தில் மாணிக்க மலரே என்ற பாடல் மிகவும் வைரலாக பரவியது. பிரியா வாரியர் தன்னுடைய புருவத்தை தூக்கி கண் சிமிட்டுவது ரசிகர்களுக்கு இடையே அதிக வரவேற்பை பெற்றது.

பிரியா வாரியர் ஃபைனல்ஸ் என்ற திரைப்படத்தில் பாடகர் நரேஷ் ஐயர் உடன் சேர்ந்து “நீ மழவில்லு” என் என்ற பாடலை பாடியவர். இணையதளத்தில் எப்போதுமே அக்டிவ்வாக இருப்பார் பிரியா வாரியர்.

அவருக்கு இன்ஸ்டா வில் 6.3 மில்லியன் ஃபாலோயர்ஸ் இருக்கின்றனர். பிரியா தனது நண்பர்களுடன் வெளியில் செல்லும் பொழுது எடுக்கும் வீடியோ மற்றும் போட்டோக்களை அவ்வப்போது வெளியிடுவார்.

அவ்வாறு வெளியிடும் படங்களை பற்றி பலர் அனாவசிய கருத்துக்களை பதிவிடுவதை கண்டு கோபம் கொண்ட பிரியா வாரியர் “என் நண்பர்களுடன் நான் என்ன செய்கிறேன், என் வாழ்க்கை எப்படி வாழ்கிறேன், எப்படி வாழ வேண்டும்” என்பது பற்றி எனக்கு தெரியும்.

உண்மை செய்திகளை மட்டும் தாருங்கள். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறியிருக்கிறார். என் வாழ்க்கையை வாழ எனக்கு தெரியும் என்று காட்டமாக கூறியுள்ளார்.