கர்ப்பமாக இருப்பதால் பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா வெண்பா?

123

வெண்பா..

பாரதி கண்ணம்மா இந்த சீரியல் மக்கள் மனதில் நன்றாக பதிந்துவிட்டது. இதில் நடிக்கும் கலைஞர்களும் மக்களுக்கு அவர்களது குடும்பத்தில் ஒருவர் போல் ஆகிவிட்டனர்.

இந்த சீரியல் வெண்பா என்ற வில்லியால் தான் இவ்வளவு நாள் ஓடிக் கொண்டிருக்கிறது. தற்போது அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் வெளிவந்தது.

இதனால் உடனே அனைவரின் கேள்வியும் சீரியலில் இருந்து நின்றுவிடுவாரா என்பது தான். அந்த கேள்விக்கும் அவரே பதில் கொடுத்துவிட்டார்.

நான் சீரியலில் இருந்து நிற்கப்போவதில்லை, தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அவரது ரசிகர்களோ இந்த நேரத்தில் அதுவும் கொரோனா காலத்தில் நீங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு வீட்டில் இருங்கள் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

சில ரசிகர்கள் அட நம்ம வெண்பா சீரியலில் தொடர்ந்து வருவார் என ஜாலியாக உள்ளனர்.