ஆர்.ஆர்.ஆர் படத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

109

ஆர்.ஆர்.ஆர்..

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் ஆர்.ஆர்.ஆர்.

ராஜமவுலி இயக்கும் இப்படத்தில் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. மேலும் வருகிற அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி 5 மொழிகளில் பிரம்மாண்டமாக, இப்படத்தை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் தீம் பாடல் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 1 ஆம் தேதி காலை 11 மணிக்கு அப்பாடல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கீரவாணி இசையில் நட்பை மையாமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்பாடலை 5 மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் பாடி உள்ளனர்.

அதன்படி தமிழில் அனிருத்தும், தெலுங்கில் ஹேமசந்திராவும், மலையாளத்தில் விஜய் ஏசுதாஸும், கன்னடத்தில் யசின் நசிரும், இந்தியில் அமித் திரிவேதியும் பாடி உள்ளனர்.