பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியான தனுஷின் 43 பட ஃபஸ்ட் லுக்!!

447

தனுஷின் 43..

நடிகர் தனுஷ் அடுத்தடுத்து தரமான படங்கள் நடித்து ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார். கடைசியாக தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம் படம் வெளியாகி இருந்தது.

ரிலீஸிற்கு முன் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் சரியான விமர்சனங்களை பெறவில்லை. ஆனால் தனுஷின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள்.

இன்று நடிகர் தனுஷிற்கு பிறந்தநாள், காலை முதல் அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் கார்த்திக் நரேன் இயக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க இருக்கும் தனுஷின் 43வது படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு மாறன் என பெயர் வைத்துள்ளனர். இதோ வெளியான ஃபஸ்ட் லுக்,