மீண்டும் முடிவு செய்யப்பட்ட கே.ஜி.எப் 2 படத்தின் ரிலீஸ்! எப்போது தெரியுமா?

107

கே.ஜி.எப் 2..

கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான கே.ஜி.எப் முதல் பாகம் வெற்றி பெற்றதால், தற்போது கே.ஜி.எப் 2 இரண்டாம் பாகத்தையும் எடுத்து முடித்துள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல்.

இப்படத்தில் யாஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, சஞ்சய் தத், பிரகாஷ் ராஜ், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர், இதன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இப்படம் ஜூலை 16 ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ஆனால், கொரோனா இரண்டாவது அலை காரணமாக இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது கே.ஜி.எப் 2 படக்குழு இப்படத்தை வரும் டிசம்பர் மாதம் உலகமுழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.