முன்னணி இசையமைப்பாளருடன் நடிகை கீர்த்தி சுரேஷ்.. யாருடன் இருக்கிறார் தெரியுமா?

170

கீர்த்தி சுரேஷ்..

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகியாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் மட்டுமே தற்போது, ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த, இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் என இரு படங்களில் நடித்து வருகிறார்.

அதே போல் தெலுங்கில் தற்போது சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்து வரும் Sarkaru Vaari Paata எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு தெலுங்கு திரையுலகில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வரும் எஸ்.தமன் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் தமனை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..