வெளியானது மகேஷ் பாபுவின் சர்க்காரு வாரி பட்டா பர்ஸ்ட் லுக் போஸ்டர்- அதிருது டோலிவுட்!!

97

சர்க்காரு வாரி பட்டா..

மகேஷ் பாபு டோலிவுட் என்ற வட்டத்திற்கு வெளியேவும் முழுவதும் ரீச் உள்ள நடிகர். இவரது டப்பிங் படங்களுக்கும் நல்ல டிமாண்ட் உண்டு. “சரியில்லேறு நீகேவ்ரெவாறு” படத்தை தொடர்ந்து இவர் நடிக்கும் படம் சர்க்காரு வாரி பட்டா

பரசுராம் பெட்லா இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு இப் படம் 2022-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. கொரானா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பின்பு இப்படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

2022-ம் ஆண்டு ஜனவரி 13-ம் தேதி வெளியீடு என்ற தகவலுடன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் 14 ரீல்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். மதி ஒளிப்பதிவு செய்கிறார், மார்தாண்ட் வெங்கடேஷ் எடிட்டிங்.

கமெர்ஷியல் அம்சங்களுடன் இப்படத்தில் நல்ல மெஸேஜும் உள்ளது என்கின்றனர் டோலிவுட் வட்டாரங்களில்.