தியேட்டரில் வெளியான வலிமை.. இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

136

வலிமை..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள வலிமை படத்திற்காக கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை படத்திற்குப் பின்னர் பெரிய திரையில் அஜித்தை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கவே இல்லை.

எனவே தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தை ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஐந்து நாட்கள் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் புதிய போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

முன்னதாக ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தற்போது இந்த மோஷன் போஸ்டர் வீடியோவை வேலூரில் உள்ள விஷ்ணு சினிமா திரையரங்கில் திரையிடப்பட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ‌

கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன. எனவே அஜித்தை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக வலிமை படத்தின் மோஷன் போஸ்டரை திரையரங்கில் திரையிட்டு உள்ளனர்.