ஷூட்டிங்கில் சந்திக்க உள்ள விஜய் மற்றும் அஜித்! அதுவும் எங்கு தெரியுமா?

123

விஜய் மற்றும் அஜித்..

தல அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் வலிமை, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் நீண்ட கால காத்திருப்பிற்கு பின் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியிடபட்டு இணையத்தில் வைரலானது.

இதனிடையே தற்போது வலிமை படத்தின் கிளைமாக்ஸ் சேஸிங் காட்சிக்காக படக்குழு ரஷ்யா செல்ல இருப்பதாகக் தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடைபெற்று வரும் நிலையில், இந்த படக்குழுவும் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அஜித்தின் ’வலிமை’, விஜய்யின் ’பீஸ்ட்’ படங்களின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் ரஷ்யாவில் நடக்க இருப்பதால், அங்கு இருவரும் சந்திக்க இருப்பதாக ரசிகர்கள் இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.