யாஷிகா கார் விபத்துக்கு நான் காரணமா.? வீடியோ வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பிய பாலாஜி முருகதாஸ்!

104

பாலாஜி முருகதாஸ்..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற “பாலாஜி முருகதாஸ் “அந்த நிகழ்ச்சியை அடுத்து இப்போதுதான் முதன்முதலாக ஒரு வீடியோ பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் யாஷிகா அவர்கள் மாமல்லபுரம் அருகே கார் விபத்தை ஏற்படுத்தினார் இதில் அவருடைய தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவிற்கு முதுகு மற்றும் கால்களில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் அந்த விபத்து காரணமாக ஆய்வு செய்த போலீசார் அதிவேகமாக காரை ஓட்டியது விபத்திற்கு காரணம் என்றும் மேலும் உயிர் சேதம் ஏற்படுத்திய தற்கும் யாஷிகா மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் புதிதாக மற்றொரு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ஆம் தேதி நள்ளிரவில் ஒரு விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் சாலையோரத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் மீது கார் மோதியது.

அந்த விபத்தில் பரத் என்ற இளைஞர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தை செய்ததும் யாஷிகா தான் என்று அவர் விபத்து நடந்தவுடன் வேறு காரில் சென்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதைப்பற்றி யாஷிகாவிடம் விசாரணை நடத்திய போலீசார் அவர் அதை மறுத்து விட்டார். நான் காரை ஓட்டவில்லை என் நண்பர் வந்த கார் விபத்துக்குள்ளானது என்று செய்தி அறிந்து நான் அங்கு சென்றேன் என்று கூறினார்.

மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து மற்றும் ஒரு அதிர்ச்சியான தகவலை ஜோ மைக்கேல் கூறியுள்ளார். காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது பாலாஜி தான் என்று அவர் கூறியுள்ளார்.

அந்த சம்பவத்திற்கு பதில் அளிக்கும் விதமாக பாலாஜி ஒரு வீடியோ பதிவில் நான் என்னுடைய KTM பைக் கூட 50 ,60 கிலோமீட்டர் வேகத்தில் தான் ஓட்டுவேன், நான் விபத்தை செய்யவில்லை என்று கூறியுள்ளார்.