ரஜினியின் அண்ணாத்த பட ஃபஸ்ட் லுக் எப்போது?- வெளிவந்த தகவல்!!

410

அண்ணாத்த..

நடிகர் ரஜினியின் நடிப்பில் தயாராகி வரும் அவரது 168வது படம் அண்ணாத்த.

அஜித்துடன் இணைந்து வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என வெற்றிப்படங்களை கொடுத்த சிவா தான் அண்ணாத்த படத்தை இயக்கி வருகிறார்.

படப்பிடிப்பு கொரோனா நோய் தொற்று காரணமாக இடைவேளை விட்டு விட்டு நடந்து வருகிறது. அண்மையில் தான் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது.

தற்போது படம் குறித்து வந்த தகவல் என்னவென்றால் படத்தின் ஃபஸ்ட் லுக் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வியாழக்கிழமை வரலாம் என்கின்றனர்.

அன்று இயக்குனர் சிவா அவர்களின் பிறந்தநாளும் கூட. விரைவில் அறிவிப்பு வரும் என கூறுகின்றனர்.