பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்த புதிய தகவல், என்ன தெரியுமா?

179

பீஸ்ட்..

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் பீஸ்ட்.

இப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படக்குழு விரைவில் ரஷ்யாவிற்கு படப்பிடிப்பிற்காக செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், பீஸ்ட் படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாகவும், அந்த மூன்று வில்லன்களும் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட பட பாணியில் இருக்காது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.