21 வருடங்களாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாமல் இருக்கும் நடிகர் மம்மூட்டி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

138

மம்முட்டி..

மலையாள திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் மம்முட்டி.

அண்மையில் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனையில், Robotic அறுவை சிகிச்சை திட்ட துவக்க விழாவில் பங்கேற்று இருந்தார்.

அப்போது நிகழ்ச்சியில் பேசிய மம்முட்டி, தனது இடதுகால் தசை நார் சேதமடைந்து 21 வருடங்கள் ஆனதாக கூறினார்.

அதற்கு அறுவை சிகிச்சை செய்தால் கால் குட்டை ஆகிவிடும் என்பதாலும், அதைவைத்து தன்னை கிண்டல் செய்வார்கள் என்பதாலும், இதுவரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

காலில் ஏற்பட்ட காயத்திற்கு நடிகர் மம்முட்டி 21 ஆண்டுகளாக அறுவை சிகிச்சை செய்துகொள்ளாதது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.