மிரர் செல்பி எடுத்து ரசிகர்களை கிறங்கடித்த எமி ஜாக்சன்.. வைரலாகும் புகைப்படம்!!

159

எமி ஜாக்சன்..

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவான மதராசப்பட்டினம் படம் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இப்படம் இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் நடந்த ஒரு காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது. ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதன் மூலம் பிரபலமான நடிகை எமி ஜாக்சன் தொடர்ந்து தமிழில் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.

முன்னதாக நடிகை எமி ஜாக்சனுக்கு, ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருந்த நிலையில், அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர்.

இதனையடுத்து படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது காதலருடன் வாழ்ந்து வந்தார். பின்னர் எமி ஜாக்சனுக்கு ஆண்ட்ரியாஸ் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில்தான் எமி ஜாக்சன் அண்மையில் தனது காதல் கணவரை பிரிந்து விட்டதாக அறிவித்து இருந்தார்.

தற்போது தனது குழந்தையுடன் தனியாக வசித்து வரும் எமி எதுவுமே நடக்காதது போல் வழக்கம் போலவே வழக்கம் கூலான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் எமி கிழிந்த கிளாமர் ஆடையில் மிரர் செல்பி எடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். ஒருவேளை மீண்டும் பட வாய்ப்புக்கு முயற்சி செய்கிறாரோ?