செல்வராகவனை தொடர்ந்து பீஸ்ட் படத்தில் வில்லனாகும் சென்சேஷனல் நடிகர்!

188

பீஸ்ட்…

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பீஸ்ட், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

மேலும் இப்படத்தில் மூன்று வில்லன்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி முதல் வில்லனாக செல்வராகவன் நடிக்கும் நிலையில், மலையாள நடிகர் Shine Tom Chacko இரண்டாவது வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சர்பட்டா படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்து ட்ரெண்டான நடிகர் ஷபீர் இப்படத்தில் மூன்றாவது வில்லனாக நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தின் ஆடிஷனிலும் அவர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.