9 முறை மூளையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட சீரியல் நடிகை சரண்யா மரணமடைந்தார்.. திரையுலகினர் அதிர்ச்சி!!

119

சரண்யா..

மலையாள சின்னத்திரையுலகில் மிகவும் பிஸியான நடிகையாக வளம் வந்தவர் சரண்யா. சில வருடங்களுக்கு முன் இவருக்கு ப.ய.ங்கரமான தலைவலி ஏற்பட்டதால், இவர் மருத்துவரை அணுகியுள்ளார்.

அப்போது, அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவருகிறது. அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றால், உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் கூறினர்.

இதனால் அவருக்கு முதல் அறுவை சிகிச்சை நடைபெறுகிறது. இதன்பின் வீடு திரும்பிய நடிகை சரண்யாவிற்கு, சில மாதங்கள் கழித்து மீண்டும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

இதனால் இரண்டாவது முறையாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதன்பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் தலைவலி ஏற்பட்டதால் மீண்டும் மருத்துவரை அணுகியுள்ளார் நடிகை சரண்யா.

இதன்பின், 7 முறை இவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர். இதனால் படிப்படியாக நடிகை சரண்யா குணமடைந்து வந்துள்ளார்.

ஆனாலும், தீடீரென சிகிச்சை பலனின்றி நேற்று நடிகை சரண்யா மரணமடைந்துள்ளார் என்று, அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. இவரின் மறைவிற்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.