சமந்தா, கீர்த்தி சுரேஷை பின்னுக்கு தள்ளிய நடிகை ராஷ்மிகா மந்தனா.. ரசிகர்கள் ஷாக்!!

191

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

இவருக்கு தென்னிந்திய மாநிலங்களில் அதிக அளவிலான இளம் ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாகவும் இருப்பார் நடிகை ராஷ்மிகா.

இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை ஒன்றை ராஷ்மிகா படைத்துள்ளார். ஆம், இன்ஸ்டாகிராமில் Followers எண்ணிக்கை, 20 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தென்னிந்திய நடிகைகள் காஜல் அகர்வால் 19 மில்லியன், சமந்தா 18 மில்லியன், கீர்த்தி சுரேஷ் 10 மில்லியன் Followers வைத்திருந்தனர்.

தற்போது காஜலை பின்னுக்கு தள்ளி ராஷ்மிகா முதலிடம் பிடித்துள்ளார்.இதனால் அவர் ரசிகர்கள் இதை கொண்டாடி வருகிறார்கள்.