தந்தை குறித்து கதறி அழுத நடிகை நயன்தாரா.. பார்ப்பவர்களையும் கலங்க வைத்த நிகழ்வு!!

125

நயன்தாரா..

நயன்தாரா நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் நெற்றிக்கண். இப்படத்தை விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படம், மூக்குத்தி அம்மன் போலவே, நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில், வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இதற்காக விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகள் கழித்து Interview கொடுக்க நயன்தாரா வந்துள்ளார். இந்த நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி தொகுத்து வழங்குகிறார்.

அதில், ஏற்கனவே ஒரு ப்ரோமோ வெளியாகியாகிருந்தது. அந்த ப்ரோமோவில் நயன்தாரா தனது நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது என்று தெரியவந்தது.

இந்நிலையில், அடுத்ததாக வெளியாகவுள்ள ப்ரோமோவில் தனது தந்தையின் உடல் நிலை குறித்து கண்கலங்கி பேசியுள்ளார்.

தனது அப்பா தான், தனக்கு ஹீரோ என்றும், கடந்த 13 வருடங்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும்,

அவரை மருத்துவமனையில் அனுமதித்தது குறித்தும் நடிகை நயன்தாரா கண்கலங்கி பேசியது, அனைவரின் கண்களையும், கலங்க வைத்துள்ளது.