கதாநாயகியாக அறிமுகமாகும் 16 வயது அஜித்தின் ரீல் மகள்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!!

635

அனிகா..

கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அவருக்கு மகளாக நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் அனிகா.

இவர் அப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் விஸ்வாசம் படத்திலும் அவருக்கு மகளாக நடித்திருந்தார். இப்படத்தில் அவர்களின் அப்பா மகள் கதாபாத்திரங்கள் பெரியளவில் பேசப்பட்டது.

இந்நிலையில் 16 வயதாகும் அனிகா தொடர்ந்து முன்னணி கதாநாயகிகளுக்கு இணையாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

மேலும் தற்போது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பேலா படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘புட்ட பொம்மா’ படத்தில் அனிகா ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.