தல-தளபதி..

தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது.

இதனிடையே IPL போட்டி விரைவில் தொடங்க உள்ள நிலையில், கிரிக்கெட் வீரர் தோனி சமீபத்தில் சென்னை வந்தடைந்தார்.

இந்நிலையில் விஜய் நடிக்கும் ‘பீஸ்ட்’ ஷூட்டிங்கும், தோனி நடிக்கும் விளம்பர பட ஷூட்டிங்கும் நேற்று சென்னையில் அருகருகே நடந்துள்ளது.

அப்போது இருவரும் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை கண்ட ரசிகர்கள் தல தளபதி நீண்ட நாட்களுக்கு பிறகு சந்தித்து கொண்டதாக பதிவிட்டு வருகின்றனர்.




