சென்சேஷன் நடிகருக்கு ஜோடியான நடிகை ஷில்பா மஞ்சுநாத்.. யாருடன் தெரியுமா?

141

ஷில்பா மஞ்சுநாத்…

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத்.

இதன்பின், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தார்.

மேலும் தற்போது இவர் நடிப்பில் தேவதாஸ் Brothers மற்றும் பேரழகி ISO உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில், தமிழ் திரையுலகின் சென்சேஷன் நடிகர்களில் ஒருவராக நட்டி நடிக்கும் புதிய படத்தில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளாராம்.

சைக்கோ திரில்லர் படத்தை புதுமுக இயக்குனர் ஹாரூன் இயக்குகிறார். ‘வேலன் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் வி.எம்.முனிவேலன் தயாரிக்கும் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

படத்தில் முக்கிய வேடங்களில் நந்தினி, பாரதா நாயுடு மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடிக்கிறார்கள்.