மீண்டும் வித்தியாசமான டைட்டிலில் விஜய் ஆண்டனியின் அடுத்த படம்.. எங்கிருந்துதான் இப்படி யோசிக்கிறாங்களோ!

225

விஜய் ஆண்டனி..

விஜய் ஆண்டனி என்றாலே வித்தியாசம் என்கிற அளவுக்கு தன்னுடைய ஒவ்வொரு படத்தின் டைட்டில்களையும் வித்தியாசமாக வைத்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறார். அந்த வகையில் அடுத்த படமும் வித்தியாசமான டைட்டிலில் உருவாக உள்ளது.

விஜய் ஆண்டனி ஆரம்பத்தில் தொடர் வெற்றி படங்களை கொடுத்தாலும் இடையில் மாஸ் ஹீரோவாக மாற ஆசைப்பட்டு சில படங்களில் மண்ணை கவ்வினார். இதனால் அவரது மார்க்கெட்டும் கொஞ்சம் அடி வாங்கியது.

மாஸ் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள இன்னும் சில காலம் ஆகும் என்பதை உணர்ந்த விஜய் ஆண்டனி மீண்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களில் கதையின் நாயகனாக நடிக்க தொடங்கினார்.

அப்படி திரும்பி வந்த முதல் படமான கொலைகாரன் படமே சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பிறகு மூடர் கூடம் நவீன் இயக்கத்தில் அக்னி சிறகுகள், ஏற்கனவே வெற்றி பெற்ற பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் என அடுத்தடுத்து அதிரடி காட்டி வருகிறார்.

மேலும் பிச்சைக்காரன் 2 படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். இந்நிலையில் அடுத்ததாக கோலி சோடா போன்ற படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார் விஜய் ஆண்டனி.

இந்த படத்திற்கு மழை பிடிக்காத மனிதன் என பெயர் வைத்துள்ளனர். விஜய் ஆண்டனியின் ஒவ்வொரு படத்தலைப்பும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து விடுகிறது.

மற்றவர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமான டைட்டில்கள் வைப்பதால் இவருடைய படங்கள் வரவேற்பைப் பெற்று வருகின்றன.