நடிகை மீரா மிதுன் அதிரடி கைது.. கதறியபடி அவர் வெளியிட்ட ஷாக்கிங் வீடியோ!

110

மீரா மிதுன்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மாடல் நடிகை மீரா மிதுன், இவர் அண்மைக்காலமாக பலரையும் கொச்சைப்படுத்தி பேசி வீடியோவை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் அவரின் ஆண் நண்பருடன் சேர்ந்து பட்டியலின மக்களை அவதூறாக பேசி வீடியோ பதிவை வெளியிட்டு இருந்தார்.

இதனால் அவரின் மேல் பல்வேறு தரப்பினர் போலீஸில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மீரா மிதுன் போலிஸார் கைது செய்ய வந்த போது, தன்னை தானே கத்தியால் குத்திக்கொள்வேன் என்று கதறி கூச்சலிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.