இதற்கெல்லாம் காரணமே எனது கணவர் தான் – நடிகை காஜல் பெருமிதம்!

178

காஜல் அகர்வால்..

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகளிலும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

மேலும் இவருடன் பத்து ஆண்டு காலமாக நண்பராக இருந்த கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் நடிகை காஜல் அகர்வால்.

திருமணத்திற்கு பின்னரும் நடிகை காஜல் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார் காஜல்.

இந்நிலையில் சமீபத்தில் கடைதிறப்பு விழா ஒன்றில் கலந்து காஜல், பேட்டியளித்துள்ளார்.

அப்போது “திருமணத்திற்கு பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக உள்ளேன். அடுத்து இரண்டு மெகா தெலுங்கு திரைப்படங்களில் ஒப்பந்தமாகியுள்ளேன்.

இப்படி நான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருவதற்கு முதல் காரணமே எனது கணவர் கவுதம் தான். அவரது ஆதரவால் தொடர்ந்து படங்களில் காமிட்டாக முடிகிறது. தொடர்ந்து அவரின் ஆதரவால் சினிமாவில் பெரியளவில் சாதிப்பேன் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.