சிவகார்த்திகேயனின் அடுத்த பட மாஸ் டைட்டில், என்ன தெரியுமா?

171

சிவகார்த்திகேயன்..

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் தற்போது இவர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

இப்படத்தை முடித்தபின் நடிகர் சிவகார்த்திகேயன் எந்த இயக்குனரின் படத்தில் நடிப்பார் என்பது பெரிய கேள்வியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஒருவரின் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், அப்படத்தின் டைட்டில் “சிங்கப்பாதை” என பதிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தை KJR ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்.