திரைபடத்தில் நாயகியாக அறிமுகமாகும் பிரபல சீரியல் நடிகை….!

151

ரக்ஷிதா…

விஜய் தொலைக்காட்சியில் நாயகியாக நடித்து வரும் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி, கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார்.

சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரக்ஷிதா மஹாலட்சுமி. பெயருக்கேற்றாற் போல் அழகிலும், நடிப்பிலும் கைதேர்ந்தவர் என்று சொல்லலாம்.

விஜய் தொலைக்காட்சியில் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான “பிரிவோம் சந்திப்போம்” என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி, சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நடிப்பால், தன் வசம் இழுத்துக்கொண்டார். சிறந்த நடிகைக்கான விருதை விஜய் தொலைக்காட்சியில் இருமுறை பெற்றிருக்கிறார்.

ஜீ சேனலில் ஒரு சீரியலிலும், ஒருசில ஷோக்களில் நடுவராகவும் பங்கேற்று உள்ளார். “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற சீரியல் மூலம், நடிகர் ஆர்.ஜே செந்திலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஒருசில தமிழ் படங்களில் சிறிய காட்சிகளிலும், நடிகையாகவும் நடித்துள்ளார். பல விளம்பர படங்களிலும் தோன்றியுள்ளார்.

இந்த நிலையில் கன்னட திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளார் ரக்ஷிதா. “ரங்கநாயக” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை குருபிரசாத் இயக்க, நடிகர் ஜக்கேஷ் முக்கிய ரோலில் நடிக்கிறார். இதுகுறித்து ரக்ஷிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “படம் துவங்கியது, நண்பர்களே உங்களுடைய ஆசிர்வாதம் எனக்கு கட்டாயம் தேவை” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனால் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இருந்து, கூடிய விரைவில் ரக்ஷிதா விலகி விடுவார் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.