மகளின் பிறந்தநாளில் வனிதா செய்த காரியம்: மகளையும் கெடுத்துவிடாதே.. எங்கே சின்ன பொண்ணு? ரசிகரின் சரமாரியான கருத்து!!

118

வனிதா..

நடிகை வனிதா தனது மகள் ஜோவிகாவின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

பல்வேறு சர்ச்சையில் சிக்கினாலும் எதையும் கண்டுகொள்ளாமல் அடுத்தடுத்து வெற்றியைத் தேடி சென்று கொண்டிருக்கும் வனிதாவின் மூத்தமகள் தான் ஜோவிகா.

அம்மா வனிதாவைப் போன்று இவரும் பிரபலமாகி வருகின்றார். மிகவும் தைரியமான இவர் தாய்க்கு ஆதரவாக எந்தவொரு பயம் இல்லாமல் பேசுவதோடு,

அம்மாவின் சமையல் கலையில் தன்னுடைய திறமையினையும் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றார்.

இந்நிலையில் ஜோவிகா தனது 16வது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படத்தினை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

மேலும் மகளின் வாய்க்கு வாய் வைத்து கேக் ஊட்டிவிடும் புகைப்படத்தினை அவதானித்த பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றார். ஆனால் சிலரோ பிள்ளைகளையும் கெடுத்துவிடாத வனிதா என்று கருத்து தெரிவித்து வருகின்றார்.