கழுத்தில் தாலியுடன் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட பிக்பாஸ் வனிதா.. வைரல் புகைப்படம்!!

404

வனிதா..

தமிழ் சினிமாவில் பெரியளவில் பேசப்படும் அதுவும் சர்ச்சையாக பேசப்படும் நடிகையாக தற்போது இருப்பவர் நடிகை வனிதா. ஆரம்பகாலத்தில் நடிகர் விஜய்யின் சந்திரலேகா படத்தில் நடிகையாக அறிமுகமாகினார்.

இதையடுத்து திருமணம், விவாகரத்து, குடும்ப பிரச்சனை என்று சினிமாவைவிட்டு விலகி இருந்தார்.

மீண்டும் ரீஎண்ட்ரி கொடுக்கும் விதமான கேபிஒய் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றினார்.

மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா அதன் பிறகு லாக்டவுன் சமயத்தில் பீட்டர் பால் எனபவரை திருமணம்செய்து சில காரணங்களால் பிரிந்தார்.

எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் அதை வனிதாவை சீண்டியே இணையத்தளத்தில் செய்திகள் வலம்வந்தது.

இந்நிலையில் அடுத்த திருமணம் எப்போது என்று கேட்டு வந்த நிலையில் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டார். அது பிக்கப் டிராப் படத்தின் போட்டோஷூட் என்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.