நயன்தாராவிற்கு போட்டியாக பாலிவுட் நடிகையை களமிறக்கும் இயக்குனர் அட்லீ.. ஷாருக்கான் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

110

நயன்தாராவிற்கு..

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ பாலிவுட்டில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

மேலும் இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளாராம்.

இந்நிலையில், இதில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இவர் அமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.