திருமணம் குறித்து நடிகை ஸ்ருதி ஹாசனின் முடிவு? அனைவருக்கும் ஷாக் கொடுத்த நடிகை!!

55

ஸ்ருதி ஹாசன்..

முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.

நடிகை ஸ்ருதி ஹாசன் சமீப காலமாக Santanu Hazarika என்பவருடன் காதலில் இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் தனது காதல் குறித்தோ, அல்லது காதலன் குறித்தோ, ஸ்ருதி ஹாசன் இதுவரை உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் தனது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக கலந்துரையாடினர்.

அதில் ரசிகர் ஒருவர் நடிகை ஸ்ருதி ஹாசனிடம் திருமணம் பற்றி கேட்டார். அதற்கு ஸ்ருதிகாசன், கண்டிப்பாக நான் திருமணம் செய்து கொள்ள போவதில்லை என கூறியுள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

இந்த தகவல் நடிகை ஸ்ருதி ஹாசனின் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது.