சினிமாவை தாண்டி நடிகை கீர்த்தி சுரேஷ் புதிதாக செய்யவுள்ள விஷயம் ! என்ன தெரியுமா?

76

கீர்த்தி சுரேஷ்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்துள்ளார், அதனை தொடர்ந்து தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் படத்திலும் நடிக்கவுள்ளார்.

மேலும் இயக்குனர் செல்வராகவனுடன் இவர் இணைந்து நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படம் அனைவரிடமும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே தற்போது கீர்த்தி சுரேஷ் தனது நண்பர்கள் இருவருடன் இணைந்து ‘பூமித்ரா’ என்னும் இயற்கை அழகு பொருட்களின் பிசினஸ் ஒன்றை தொடங்கியுள்ளதாக அவரின் சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த அறிவிப்பில் கீர்த்தி “ இது முற்றிலும் இயற்கை பொருட்களை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. இரசாயனம் இல்லாத செயற்கை நிறம் அல்லாத பொருட்கள் ”என கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.