“நானும் இந்த மாதிரி பண்ணிருக்கேன்” யாஷிகாவுக்கு ஆறுதல் கூறிய பிரபல நடிகர்…!

382

யாஷிகாவுக்கு..

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கருத்துகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர்.

இந்நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் அவருக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் போஸ்ட் பதிவிட்டுள்ளார்.

அதில், அன்புள்ள யாஷிகா, நீங்கள் இந்த நேரத்தில் தான் மிகவும் தைரியமாகவும் பாசிடிவாகவும் இருக்க வேண்டும். நீங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி வருவீர்கள்.

நானும் இந்த மாதிரி சூழ்நிலையில் இருந்துள்ளேன். அது எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். மிக விரைவாக நீங்கள் குணமடைந்து பழைய நிலைக்கு திரும்புவீர்கள் என்று வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதை பார்த்த யாஷிகாவும் அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.