நீலிமா ராணி..
சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர். அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து,
மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமான நீலிமா ராணியும் கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23 படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.
வில்லி கதாபாத்திரங்களில் சதா முறைத்து கொண்டு பார்க்கவே பயமுறுத்தும் முகபாவனைகளுடன் இவரை பார்த்து பழகி விட்ட நிலையில், புடவை அணிந்து சோஃபாவில் போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் பயங்கர வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த ரசிகர்கள், “எவ்வளவு பெரிய Sofa” என்று கமென்ட் அடிக்கிறார்கள்.