பிரபல நடிகருடன் ஒன்றாக ஜிமில் ஒர்கவுட் செய்த நடிகை ராஷ்மிகா..!

195

ராஷ்மிகா மந்தனா..

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.

சமீபத்தில் கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படத்தின் மூலம் தமிழிலும் கதாநாயகியாக அறிமுகமாகிவிட்டார்.

மேலும் தற்போது தெலுங்கில் இரண்டு படங்களும், இந்தியில் இரண்டு படங்கள் என மிகவும் பிசியாக நடித்து கொண்டு இருக்கிறார் ராஷ்மிகா.

இந்நிலையில் தனது துணை நடிகர்களில் ஒருவரான, நடிகர் விஜய் தேவரகொண்டாவுடம் இணைந்து

ஒரே ஜிமில் ஒர்கவுட் செய்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் இணைந்து, கீதா கோவிந்தம் மற்றும் டியர் காம்ரேட் என இரு திரைப்படங்கள் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த புகைப்படம்..