‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் செகண்ட் லுக் ரிலீஸ்: புது கெட்டப்பில் சிம்பு!!

165

வெந்து தணிந்தது காடு..

சிம்பு நடித்து வரும் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘வெந்து தணிந்தது காடு’. வேல்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்துக்குக் கலை இயக்குநராக ராஜீவன், பாடலாசிரியராக தாமரை, இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்புதொடர்பான பிரச்சினைகள் அனைத்தும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பேசி முடிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2ம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய போஸ்டரைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இது சிம்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் சிலம்பரசனுக்கு அம்மாவாக ராதிகா நடித்து வருகிறார். சென்னை படப்பிடிப்பை முடித்துவிட்டு, புதுச்சேரியில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.