சமந்தாவை தொடர்ந்த விவாகரத்து சர்ச்சை.. முற்றுப்புள்ளி வைத்த சமந்தா..!

90

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

தற்போது நடிப்பிற்கு ப்ரேக் விடுவதாக அறிவித்தார் சமந்தா. இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது பெயரை S என மாற்றினார். நாகசைதன்யாவுடன் சமந்தா விவகாரத்து செய்ய போவதாக வதந்திகள் பரவின.

தனது மாமனாரான நாகர்ஜூனாவின் பிறந்தநாளுக்கு சமந்தா வாழ்த்தினால் விவாகரத்து என்ற வதந்திக்கு முற்றுப்புள்ளி என ரசிகர்கள் விவாதித்து வந்தனர். இந்நிலையில் நாகர்ஜூனா பிறந்தநாளுக்கு சமந்தா,

“உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் மாமா” என ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.