மீண்டும் இணைந்து 96 கூட்டணி.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்!!

175

96 கூட்டணி..

பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 96.

2017ஆம் ஆண்டு வெளியாகியிருந்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

குறிப்பாக கோவிந்த் வசந்தாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசைக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தன.

தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட்டான இப்படத்தை தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டன.

இந்நிலையில், இயக்குனர் பிரேம் குமார் அடுத்ததாக இயக்க உள்ள புதிய படத்திலும் நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தன் கைவசம் வைத்துள்ள படங்களை முடித்துவிட்டு, பிரேம்குமார் இயக்கும் படத்தில் நடிக்க நடிகர் விஜய்சேதுபதி திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தகவல் தற்போது விஜய் சேதுபதியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சப்ரைஸை கொடுத்துள்ளது.