தடகள வீரராக நடிக்கும் ஆதியின் “கிளாப்” படத்தின் விறுவிறுப்பான டீசர் வெளியானது!!

121

“கிளாப்” டீசர்..

தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான மிருகம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆதி. இதை தொடர்ந்து இவர் ஈரம், அரவான் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

கடைசியாக இவர் நடிப்பில் வெளியான மரகதநாணயம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் பிரித்வி ஆதித்யா எழுதி இயக்கியுள்ள கிளாப் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் தடகள விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஆகாங்ஷா சிங் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் நாசர், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் கிளாப் படத்தின் அதிரடியான டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.