நான் என்ன செய்தால் என்ன, உங்களுக்கு எல்லாம் எங்கே எரிகிறது தெரியவில்லை- மோசமான விமர்சனத்துக்கு சீரியல் நடிகை பரீனா பதிலடி!!

116

பரீனா..

பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மக்களின் பேவரெட் சீரியலாக உள்ளது. நாளுக்கு நாள் சீரியலுக்கான வரவேற்பு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

இயக்குனரும் கதையை மிகவும் சுவாரஸ்யமாக கொண்டு செல்கிறார். இப்போது சீரியலில் வில்லியை காலி செய்யும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சீரியல் மூலம் மக்களுக்கு நன்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறிவிட்டார் வெண்பா என்கிற பரீனா. இவர் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என அறிவித்ததில் இருந்து நிறைய போட்டோ ஷுட் நடத்தி வருகிறார்.

அதற்கு நிறைய நல்ல கமெண்ட்டுகள் வந்தாலும் சில மோசமான விமர்சனங்களும் வந்து கொண்டிருக்கிறது.

அந்த மோசமான விமர்சனங்களை எல்லாம் பார்த்த பரீனா தனது இன்ஸ்டாவில், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எத்தனை போட்டோஷூட் ஏதோ நீ தான் இந்த உலகத்திலேயே பிரெக்னேன்ட் மாதிரி என்று கேள்வி கேட்கிறார்கள்.

அதற்கு என்னுடைய பதில் மாடலிங் என்னுடைய வேலை, நான் ஒல்லியாக இருந்தால் என்ன குண்டாக இருந்தால் என்ன பிரெக்னேன்ட்டாக இருந்தால் என்ன நான் வேலை செய்வேன்.

உங்களுக்கு எல்லாம் பின்னால் எங்கே எரிகிறது எனக்கு புரியவில்லை என்று பதிவு செய்துள்ளார்.