மார்டன் உடையில் அசத்தும் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கர்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

711

அதிதி சங்கர்..

தமிழ் திரையுலகில் பிரமாண்ட இயக்குனர் என்று பேரெடுத்தவர் இயக்குனர் சங்கர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கரின் திருமணம் சமீபத்தில் தான், சிறப்பாக நடைபெற்றது.

இயக்குனர் சங்கரின் இரண்டாவது மகள் அதிதி சங்கர், திரையுலகில் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.

அதுவும், கார்த்தியின் நடிப்பில், முத்தையா இயக்கத்தில் உருவாகும், விருமன் படத்தில் தான் அதிதி சங்கர், நடிகையாக அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சங்கர் இயக்கத்தில் ராமச்சரன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் அதிதி சங்கர் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்விற்கு, அசத்தலான மார்டன் உடையில் வந்துள்ள அறிமுக நடிகை அதிதி சங்கர், அதனை வீடியோ எடுத்து தனது சமுக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த வைரல் வீடியோ..