“கடவுள் கொடுத்த மிக பெரிய கிபிட் விஜய்யின் நட்பு தான்” – மேடையில் பாலாஜி சொன்ன விஷயம்..!

524

பாலாஜி..

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று தான் BB ஜோடிகள்.

இதில் பிரபல காமெடி நடிகர் பாலாஜி மற்றும் நிஷா போட்டியாளர்களாக நடனமாடி வருகின்றனர்.

மேலும் தற்போது வெளியாகியுள்ள புதிய ப்ரோமோவில் பாலாஜி தளபதி விஜய்யுடனான நட்பு குறித்து பேசியுள்ளார்.

அதில் ” கடவுள் கொடுத்த மிக பெரிய கிபிட் விஜய்யின் நட்பு தான், அவருடன் நான் 8 வருடங்கள் ட்ராவல் செய்துளேன். ஷூட்டிங்கை தாண்டி எப்போதும் நான் அவருடன் தான் இருப்பேன்.

ஒருமுறை அப்பாவிற்கு உடல்நிலை முடியலாம் போய்விட்டது. இதை நான் விஜய் சாரிடம் சொல்லவில்லை, ஆனால் நான் ஷூட்டிங்கில் டென்ஷனாக இருந்ததை பார்த்த விஜய் சார். என்னிடம் கூட கூறாமல் அப்பாவை அவர் சந்தித்து 1 லட்சம் கொடுத்துவிட்டு வந்தார்”.