காதலர் விக்னேஷ் சிவனுக்கு புதிய பட்டம் கொடுத்த நடிகை நயன்தாரா.. என்னவென்று தெரியுமா?

453

நயன்தாரா..

தமிழ் சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் நயன்தாரா, தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வருகிறார்.

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம் காமெடி ரொமான்ஸ் படமாக தயாராகி வருகிறது.

‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் பாடல், கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இரண்டாவது பாடல் குறித்த முக்கிய அப்டேட்டை நயன்தாரா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளான வரும் செப்டம்பர் 18ஆம் தேதி ‘டூ.. டூ.. டூ’ என்ற இரண்டாவது பாடல் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் அந்த டுவிட்டில் விக்னேஷ் சிவனை ‘அன்பான டைரக்டர்’ என குறிப்பிட்டுள்ளார். இது நயன்தாரா கொடுத்த புதுபட்டம் என கூறப்படுகிறது.