திகிலூட்டும் ரெஜினாவின் ‘சூர்ப்பனகை’ படத்தின் ட்ரைலர்….!

191

“சூர்ப்பனகை”..

கார்த்திக் ராஜு இயக்கத்தில் நடிகை ரெஜினா நடித்துள்ள படம் சூர்ப்பனகை. இதில் மன்சூர் அலிகான், கிஷோர், அர்ச்சனா கவுடா உள்ளிட்ட மேலும் பலர் நடிக்கின்றனர்.

சாம் சி.எஸ். இப்படத்துக்கு இசையமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆப்பிள் ட்ரீ ஸ்டுடியோஸ் சார்பில் ராஜசேகர் வர்மா தயாரிக்கும் இப்படம், ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இந்த ட்ரைலர் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது.