தலைவியை தொடர்ந்து வரலாற்று படத்தில் கங்கனா ரணாவத்.. அதுவும் எந்த கதாபாத்திரத்தில் தெரியுமா?

647

கங்கனா ரணாவத்..

ஏற்கனவே ராமாயண கதையை மையப்படுத்தி சில படங்கள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது பாலிவுட்டிலும் ‘சீதா’ என்ற பெயரில் படம் உருவாகிறது.

சீதையின் கண்ணோட்டத்தில் காட்சிகள் நகர்வது போன்று திரைக்கதை அமைத்துள்ளதால், இப்படத்திற்கு ‘சீதா’ என்று பெயர் வைத்துள்ளனர்.

3டி தொழில்நுட்பத்தில் தயாராகும் இப்படத்தை நிதிஷ் திவாரி, ரவி உடையார் என இரு இயக்குனர்கள் இணைந்து இயக்குகிறார்கள்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் தயாராக உள்ளது. இப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் கரீனா கபூரை அணுகினர்.

ஆனால், அவர் ரூ.12 கோடி சம்பளம் கேட்டதால், தற்போது அவருக்கு பதிலாக நடிகை கங்கனா ரணாவத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதனை படக்குழுவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கங்கனா ரணாவத் சமீபத்தில் வெளியான மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.