“ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டீங்க..? மயக்கம் என்ன ஹீரோயினா இது..?” ரிச்சாவின் புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !

229

ரிச்சா..

பிறை தேடும் இரவிலே பாட்டை யாராலும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரிச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார்.

அதன் பிறகு நடிப்புக்கு முழுக்குப் போட்டு வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.

கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்க்கு பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்ட ரிச்சா,

காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார்.இந்நிலையில், தற்போது கணவருடன் நெருக்கமாக எடுத்துக்கொண்ட சில செல்ஃபி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள், “ஆள் அடையாளம் தெரியாம மாறிட்டீங்க..? மயக்கம் என்ன ஹீரோயினா இது..?” என்று ஷாக் ஆகி வருகிறார்கள்.