நான் எப்படி ஆடை அணிய வேண்டும் என்பது என்னுடைய உரிமை : கடுப்பான நடிகை ஷிவானி!!

110

நடிகை ஷிவானி..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இரட்டை ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார் இளம் சீரியல் நடிகை ஷிவானி.

இதுமட்டுமின்றி தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆனார்.

இந்நிலையில் ஷிவானி நாராயணன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளது : “எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

யூடுயூப்பில் பணம் சம்பாதிக்கும், ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர். இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய உங்களுக்கு வெட்கம் இல்லையா”.

மேலும் “நான் என்ன ஆடைகளை உடுத்த வேண்டும் என்ற உரிமை எனக்கு மட்டும் தான் உள்ளது. எதை அணிய வேண்டும் எதை அணிய கூடாது என்று எனக்கு தெரியும். என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்த்து இருக்கிறார்கள்”.

“நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்காக நான் செய்யவில்லை .

அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை. என்னுடைய சுய விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள்” என்று மிகவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.