விவாகரத்து வதந்தி குறித்து கேட்ட பத்திரிக்கையாளர்- சமந்தா கொடுத்த பதிலடி!!

543

சமந்தா..

நடிகை சமந்தா தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் ஒரு நடிகை. இவரது படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபிஸில் பெரிய கலெக்ஷனை பெற்றுள்ளது.

அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

கடந்த சில வாரங்களாகவே சமந்தா அவரது கணவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்கிறார் என செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

அண்மையில் கோவிலுக்கு வந்த நடிகையிடம் பத்திரிக்கையாளர் ஒருவர் விவாகரத்து செய்தி குறித்து கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர், அறிவு இருக்கிறதா, இதுதான் கேட்கும் இடமா என பதிலடி கொடுத்துள்ளார்.

அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.