பிக்பாஸின் பிரபல காதல் ஜோடி, திருமணத்தில் முடிந்தது : தம்பதியின் அழகிய போட்டோக்கள் இதோ!!

1529

இந்தியா முழுவதும் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ். இந்நிகழ்ச்சியினை தமிழில் கடந்த இரு சீசன்களாக நடிகர் கமலஹசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த சீசனில் நடிகை ரித்விகா டைட்டில் வின்னராக தேர்வானார்.

தமிழை போல மலையாளத்திலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபலமான காதல் ஜோடி சீரியல் நடிகர் ஸ்ரீநிஷ் அரவிந்த்- மலையாள நடிகை பியர்லி மானே ஜோடி. பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே அனைவரும் தூங்கிய பிறகு ரகசியமாக பேசுவது, மோதிரத்தை மாற்றி கொண்டது என பல்வேறு வகையில் தங்களது காதலை வெளிப்படுத்திய இவர்கள் தற்போது திருமணம் செய்யவுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தை தொடர்ந்து இவர்களின் திருமணம் வருகிற 8ஆம் தேதி ஸ்ரீநிஷின் குடும்ப முறைப்படி பாலக்காட்டில் நடைபெறவுள்ளது. இதனால் இருவரும் தங்களது ஜோடியான போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகின்றனர்.