வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் நடிகை ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படம்!

490

ஜான்வி கபூர்..

பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என்று பல மொழி சினிமாக்களில் கொடிக்கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர். தற்போது பாலிவுட் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார்.

மேலும் சிறந்த கதாபாத்திரத் தேர்வுகளின் மூலம் தற்போது ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் தனக்கான ஒரு இடத்தையும் தக்க வைத்துள்ளார். இந்நிலையில் நடிகை ஜான்வி கபூர் சோஷியல் மீடியாக்களில் பதிவு செய்யும் கவர்ச்சிப் புகைப்படங்களால் ஏராளமான ரசிகர் பட்டாளத்தைத் தன்வசம் வைத்துள்ளார்.

அவர் தற்போது வில்லாக வளைந்து வொர்க் அவுட் செய்யும் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். அந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் “தடக்” எனும் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஜான்வி கபூர். இந்தத் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த நிலையில் அடுத்து “கோஸ்ட் ஸ்டோரிஸ்“ எனும் ஆந்தாலஜி வகை திரைப்படத்தில் நடித்து இருந்தார்.  இந்தப் படத்திலும் நடிகை ஜான்வி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

அடுத்து “ரூஹி“ திரைப்படத்தில் பேயாக வந்து பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்தார். தற்போது தமிழில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிதது ஹிட் அடித்த திரைப்படமான “கோலமாவு கோகிலா” திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல மலையாளத்தில் ஹிட் அடித்த திரைப்படம் “ஹெலன்“. இந்தத் திரைப்படம் தமிழில் “அன்பிற்கினியாள்’‘ எனும் பெயரில் நடிகை கீர்த்தி பாண்டியன் நடிப்பில் வெளியாகி நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்தது. இந்தத் திரைப்படத்தின் இந்தி ரீமேக்கிலும் நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருக்கிறார்.

அதோடு இவரது நடிப்பில் “தோஸ்தானா 2” எனும் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்படி அடுக்கடுக்கான ஹிட் படங்களில் நடித்து வரும் நடிகை ஜான்வி கபூர் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.