இந்தியளவில் மிகப்பெரும் சாதனையை செய்த தனுஷ், சாய்பல்லவி!!

1001

சாதனையை செய்த தனுஷ், சாய்பல்லவி..

தனுஷ் இந்தியாவே அறியப்பட்ட நடிகர். இவர் நடிப்பில் அடுத்த வாரம் அசுரன் படம் திரைக்கு வருகின்றது.

இப்படத்தை தொடர்ந்து இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது. இந்த படங்களும் அடுத்தடுத்து தயாராகி வருகின்றது.

இந்நிலையில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் மாரி-2. இப்படத்தில் யுவன் இசையில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடல் உலகளவில் புகழ் பெற்றது.

இந்த பாடல் தற்போது 650 மில்லியன் ஹிட்ஸை கடந்து சாதனை படைத்துள்ளது, இந்தியளவில் தற்போது இப்பாடல் 9வது இடத்தில் உள்ளது.

எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 700 மில்லியனை இப்பாடல் கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.